இங்கிலாந்தில் உள்ள போல்டன் நகரில் இந்தியாவில் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்து வருவதால் அந்த நகரம் இந்திய வைரசுக்கான “ஹாட்ஸ்பாட்” என்று அழைக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள போல்டன் நகரம் இந்தியாவில் மாறுபாடு அடைந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அதிக அளவிலான பரிசோதனையை முன்னெடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நகரத்தின் கொரோனா தடுப்பூசி திட்டம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சராசரியாக 100,000-க்கு 20.6 பேர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தொற்று விகிதங்கள் போல்டனில் 100,000 பேருக்கு 50 முதல் 89 வழக்குகள் வரை அதிகரித்து வருவதை காட்டுகின்றனர்.
அதிலும் குறிப்பாக தொற்று விகிதம் ரம்வொர்த் தெற்கு பகுதியில் 500 மடங்கு அதிகரித்து, 100,000 பேருக்கு 359. 3 பேர் என்ற விகிதத்தில் வைரஸால் பாதிக்கப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்திய வகை கொரோனா தொற்றால் பிரித்தானியாவில் மொத்தம் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 13 பேர் போல்டனில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு வகை வைரஸ் தொற்றுகளும் போல்டனில் தீவிரமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.