Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்ளோ பேருக்கா..? மேலும் உறுதியான பாதிப்புகள்… சிவகங்கையில் பரபரப்பு தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, வீட்டு தனிமைகளில் 1,744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே 184 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |