புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா குறித்து பதாகைகளை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வீரரெத்தினம் என்பவர் வசித்து வருகிறார். தன்னார்வலரான இவர் ஊரடங்கு காலத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனத்தில் முன்பு வைத்துக்கொண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றி வந்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இதுக்குறித்து அவர் கூறுகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்டேன்.
இதனையடுத்து கொரோனா வைரஸ் வேண்டாம் விரட்டு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துக்கொண்டு மூன்று மாவட்டங்கள் மட்டுமே சென்றுள்ளேன். இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்கள் செல்வதற்கு தமிழக முதலமைச்சரிடம்டம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளேன். அந்த அனுமதி கிடைத்தவுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.