கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க இருந்தன. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள்.
Sources: Indian Premier League (IPL)-2020 postponed till April 15. #Coronavirus pic.twitter.com/r8C2TwUnMY
— ANI (@ANI) March 13, 2020
எனவே வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதால் இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் குறித்து நாளை மறுநாள் ஐபிஎல் நிர்வாகிகள் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனா ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.