டெல்லியில் கொரோனா வைரசால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர் என முதல்வர் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளனர்.
டெல்லியில் கொரோனா வைரஸால் 7,000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,500 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மீதமுள்ளவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் நோயின் அறிகுறியே இல்லாதவர்கள். சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன.
1500 பேரில் 27 பேர் மட்டுமே வெண்டிலெட்டரில் உள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா நோயிலிருந்து 2,069 பேர் குணமடைந்துள்ளனர்.அனைத்து நோயாளிகளும் குணமடைய நாங்கள் கடுமையாக முயற்சி எடுத்து வருகிறோம்.. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 73 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் இறந்தவர்களில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த நோயால் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டெல்லியில் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர். எனவே வயதானவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.