எஸ்தினி நாட்டு பிரதமர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல முக்கிய புள்ளிகளும் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் உள்ள சிறிய எஸ்வதினி விநாட்டையும் விட்டுவைக்கவில்லை. வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாடு சுவாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த காரணத்தால் 6 ஆயிரத்து 700 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 127 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த நாட்டு பிரதமர் அம்புரோஸ் லாமினியும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உடல் நிலை சீராகவும், எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருந்துள்ளார். இதையடுத்து டிசம்பர் 1ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது உடல் நிலை சீராக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பிரதமர் அம்புரோஸ் லாமினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அந்நாட்டின் துணை பிரதமர் தெம்பா மாசுகு உறுதிப்படுத்தியுள்ளார்.