கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதியதொரு முககவசத்தை மெக்சிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று முககவசம் அணிவது. இதனை அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்று உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ் கோவ்-2 வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் புதியதொரு முககவசமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை மெக்சிகோ சிட்டியில் உள்ள தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இது துணியினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தாமிரம் மற்றும் வெள்ளி நானோலேயர்கள் உள்ளன. இதன் தடிமனானது 30 முதல் 40 நானோமீட்டர் ஆகும். மேலும் இதனை பத்து முறை துவைத்து உபயோகப்படுத்த முடியும். குறிப்பாக ஒரு நாளில் 200 முககவசங்களை தயாரிக்க முடிந்தாலும் இவற்றை பெருமளவில் தயாரிக்கும் திட்டம் இல்லை என்று கூறப்படுகிறது.