கொரோனா வைரசுக்கு எதிராக ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி 78% செயல்திறன் வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், இதனை தடுப்பதற்கு கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவேட்சின் தடுப்பூசி ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்தது.
இதற்கு மத்தியில் இந்த தடுப்பூசியின் 3 கட்ட மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு வந்தது. இதன் 2-வது இடைக்கால பகுப்பாய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி லேசானது முதல் கடுமையானது வரையிலான கொரோனா தொற்றுக்கு எதிராக 78% செயல்திறனை வாய்ந்தது என்று கண்டறியப்பட்டன.இந்த கோவெக்சின் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு 100% நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு எனவும் தெரிந்துள்ளது.
இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்” சமீபகாலமாக கொரோனா அலை எழுச்சி பெற்ற நிலையில், அறிகுறிகளுடன் கூடிய 127 பேர் பதிவு செய்யப்பட்டன. இதில் லேசான, மிதமான, கடுமையான கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 78% என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றன.