Categories
பல்சுவை

“கொரோனா” இவங்க இல்லைனா…. எது பண்ணியும் புரோயோஜனம் இல்லை….. கிருபானந்த வாரியார்…!!

துப்புரவு பணியாளர்களின் அற்புத சேவை பணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

வணக்கம் வாசகர்களே நாடு மிக மிக முக்கியமான சூழலை சந்தித்துக் கொண்டு வருகிறது. இது நம் அனைவருக்கும் முக்கியமான காலகட்டம். இப்போது விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை மக்களிடையே பரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒரு முறை கிருபானந்த வாரியார் அவர்கள் கர்நாடக கச்சேரிக்கு சென்றிருந்தார். அங்கு இரண்டு மணி நேரம் மிகப்பெரிய கச்சேரி நடந்து இருக்கிறது. அங்கு பாடகர் அருமையாக பாட, இசைக்கருவிகளை இசைத்தவர்களும் அருமையாக தங்களது பணியை செய்து இருந்தனர்.  நிகழ்ச்சி முடிந்த பிறகு கிருபானந்தவாரியார் பேசுகிறார் ஒருத்தருக்கு பரிசு தர ஆசைப்பட்டார். எல்லாரும் பாடகர் அல்லது மிருதங்கம் வாசித்த நபருக்கு பரிசு கொடுப்பார் என நினைத்தார்கள்.

ஆனால் கதம் என்னும் பானையை பத்திரமாக பையிலிருந்து எடுத்து கீழே வைத்து விட்டு பின் அவர்கள் வாசித்து முடித்த பின் அதை பைக்குள் போட்டு சென்ற சிறுவனுக்கு தான் அந்த பரிசு என்று அறிவித்தார். இதை பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அப்போது கிருபானந்த வாரியார் கூறினார் ,பாடியவர் அதற்கு ஏதுவாக வாசித்தவர் இவர்கள் இருவரும் அதை முறைப்படி பயங்கரமாக கற்றுக்கொண்டு இங்கு அவர்களது திறமையை காண்பித்தனர்.

ஆனால் நாம் செய்வது மிகச் சின்ன வேலைதான் என அஜாக்கிரதையாக அந்த சிறுவன் இருந்திருந்தால் கதம் என்னும் இந்த பானை உடைந்து போயிருக்கும். கச்சேரியே நடந்திருக்காது. உலகத்தின் எந்த வேலையும் சின்னது,  பெரியது என கிடையாது. ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒவ்வொரு பணியும் நாட்டிற்கு ரொம்ப ரொம்ப முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

அதைத்தான் நாமும் சொல்கிறோம் இன்று நாம் எல்லோரும் பத்து நாளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு வீட்டிற்குள் அமர்ந்து இருக்கும் இந்த வேளையில், சரியான கையுறை, ஆடை, முககவசம் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள் தினந்தோறும் பணியை செய்து வருகிறார்கள். இவர்கள் நாள்தோறும் இந்த வேலையை செய்யவில்லை என்றால், இவர்கள் யாரும் மற்ற வேலை செய்வதில் துளியளவு கூட பிரயோஜனம் இல்லை. ஆக துப்புரவு பணியாளர்களும் ஒருவகையில் கோர்ட் போடாத மருத்துவர்கள்தான். அவர்களை நாம் எங்கேயாவது பார்த்தோமேயானால் அவர்களுக்கு தேவையான சிறிய உதவியைச் செய்யலாம். நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கலாம்.

Categories

Tech |