தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் இரவு விடுதிக்குச் சென்று வந்த 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இரவு விடுதிக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு விடுதி அமைந்துள்ள பகுதி குறுகிய இடமாகும். அங்கு அதிகப்படியான மக்கள் ஒரேநேரத்தில் குவிந்ததால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட காரணமென்று கூறப்படுகிறது.
வல்லரசு நாடுகளே திணறும் இந்த வேளையில் கடந்த ஐந்து நாள்களாக 10-க்கும் குறைவானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது ஒரேநாளில் 13 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை துணை அமைச்சர் லிம் கேங் லிப் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் 10822 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9484 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 256 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.