Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் கொரோனா…. ஒரே நாளில் 298 பேர்…. வெளியான தகவல்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 298 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் 298 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 39 பேர் பெண்கள் ஆவர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ஆயிரத்தி 554 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கொரோனா தொற்றிலிருந்து 433 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 504 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் 2,598 பேர் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |