சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் 50 நபர்கள் புகலிடம் கோருவோர் மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் புகலிடம் கோருவோர் மையத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த மையம் முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த மையத்தில் 152 பேர்கள் தங்கி இருந்து வரும் நிலையில் நூறு பேரை தனிமைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சமூக ஆர்வலர்கள் பலரும் அந்த மையத்தில் சுகாதாரம் பேணப்படாததே நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்ட காரணம் என கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகினறனர். மேலும் பாஸலில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு 88-ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.