கொரோனா நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டில் விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா நோய் பரவல் பரவி நிரம்பியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த கொரோனாவின் இரண்டாவது அலை அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று கடிதம் ஒன்றினை எழுதி வெளியிட்டுள்ளார். மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மாதம் 25 ஆம் தேதி நோய் கட்டுப்பாட்டு விதிகளை உள்ளூர் மட்டத்திலும் தீவிரமாகவும் அமல்படுத்துமாறு உத்தரவை வெளியிட்டது. இதனை கட்டாயமாக பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் சமீபகாலமாக கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் பரவி வருகின்றது. அத்தகைய மாவட்டத்தின் உள்ளடக்கிய பகுதிகளில் பலத்த கட்டுப்பாடு விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்முறையில் ஈடுபடுத்த வேண்டும். உள் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நிலைமை ஆய்வுசெய்து அதற்கேற்ப நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மாவட்ட உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதன்பின் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வு கட்டுப்பாடுகளை மீறாமல் விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள் கூறியுள்ளார்.