Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு”…. மீண்டும் சீனாவில் அதிகரிப்பு…!!

சீனாவில், கடந்த 6 நாட்களில் மீண்டும் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீனாவில் இது வரை கொரோனா பாதிப்பில் 4,636 பேர் பலியானதாகவும், மொத்தம் 89,522 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்துக்கூறி, சீனா ஏமாற்று வேலை செய்வதாக, உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட விவரங்களில் இருந்தே தெரிகிறது. முன்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை, நேற்றைய நிலவரப்படி 92 ஆக இருந்தது.

Categories

Tech |