பிரபல நடிகை ஹூமா குரேஷி குழந்தைகளுக்கான கொரோனா வார்டு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி தற்போது வலிமை திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டுமின்றி தொண்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அதன் மூலம் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது தொண்டு நிறுவனம் மூலம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இனி வரும் கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே அதனை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். அதற்காக டெல்லியில் குழந்தைகளுக்காக 30 படுக்கைகள் கொண்ட வார்டை உருவாக்கி வருகிறோம் என்று கூறியுள்ளார்.