Categories
உலக செய்திகள்

அதுல போனா எங்களுக்கு கொரோனா வந்துரும்…இதுதான் சேஃப்டி… பொதுமக்களின் முடிவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சைக்கிள் பஞ்சம்…!

சுவிட்சர்லாந்தில் திடீரென சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தற்போது சைக்கிள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சைக்கிள்களை வாங்க நினைப்பவர்கள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சைக்கிள்களை வாங்கி தாங்கள் நினைத்த இடத்திற்கு சென்று வருகின்றனர்.

இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டம் என்பதால் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. முன்னதாக ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கண்டெய்னர்கள் மூலம் சைக்கிள்கள் கொண்டுவருவதற்கு 1,600 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது ஒரேடியாக 16,000 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் சுவிச்சர்லாந்தில் சைக்கிள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |