கொரோனா உருமாறிக்கொண்டே தான் இருக்கும் என அமெரிக்க மருத்துவதுறை தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக ஒருசில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மருத்துவ துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முறையை குறித்து கூறியுள்ளார். அதில், கொரோனா மேலும் மேலும் உருமாறிக் கொண்டே தான் இருக்கும். அது எப்படி உரு மாறிக் கொண்டிருந்தாலும் அதை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தீவிரம் அதிகமாகும் போது தான் அதனுடைய வகையின் அடையாளம் காணமுடியும் என்று தெரிவித்துள்ளா.ர் எனவே மக்கள் தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தற்போது பரவிவரும் புதிய வகையான கொரோனா வேகமாக பரவும் தன்மை உடையது. ஆகவே மக்கள் முக கவசம் அணிவது, ஓரிடத்தில் அதிகமான எண்ணிக்கையில் கூஓடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.