Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவை வென்ற 98 வயது கமல் பட நடிகர்..!!

கொரோனாவை வென்றுள்ளார் கமல் பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவருக்கு வயது 98.

‘பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்தவர் பிரபல மலையாள உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவருக்கு 98 வயதாகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார். சந்திரமுகி, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். 98 வயதில் கொரோனாவை வென்று இவர் சாதித்து காட்டியுள்ளார்.

அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இச்செய்தி அறிந்து பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். தனது தந்தை ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாகவும், அவருக்கு எந்த வித வியாதிகளும் இல்லை என்றும் பவதாசன் கூறியுள்ளார். மேலும், உன்னிகிருஷ்ணன் ஜிம்முக்குச் சொந்தக்காரராக இருந்தார். சிறு வயதிலிருந்தே உடலை ஆரோக்கியமாகக், கச்சிதமாக வைத்திருப்பதில் ஈடுபாடு காட்டி வருபவர். பாடி பில்டிங்கும் செய்துள்ளார்

Categories

Tech |