கொரோனா நோயாளிகளின் கண்களில் தொற்றின் தடயங்கள் இருக்கும் என அறிவியல் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்
கொரோனா தொற்றின் அறிகுறிகள் நோயாளிகளின் மூக்கில் கண்டுபிடிக்கப்படாத சில தினங்களுக்கு பின்னர் கண்களில் இருக்கும் என அறிவியல் ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து 65 வயதான பெண்மணி ஜனவரி 23 அன்று இத்தாலிக்கு பயணம் செய்தார். ஆறு நாட்களுக்குப் பின்னர் தொண்டை புண், வரட்டு இருமல், வெண்படலம் மற்றும் இளஞ்சிவப்பு கண், கண் இமை மற்றும் இமைகளை சுற்றியுள்ள வீக்கம் போன்ற அறிகுறிகளை தொடர்ந்து அந்தப் பெண் இத்தாலியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அந்த பெண்ணின் கண்ணில் இருந்து நீர் துளிகளை எடுத்து பரிசோதனை செய்த பொழுது அதில் கொரோனா வைரஸ் தடயங்கள் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஆய்வறிக்கையின்படி சில தினங்களுக்கு பிறகு அந்தப்பெண்ணின் இளஞ்சிவப்பு கண் சரியானதும் தொற்று அப்பெண்ணின் கண்களிலேயே இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. மீண்டும் கண்களில் கொரோனா வைரஸ் உருவானதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு மூலம் வாய், மூக்கு மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்கவும் அவப்போது கைகளை கழுவுதல் போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது என அந்த ஆய்வு அறிக்கை கூறியது. கண் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.