இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக அதிகமாகிக் கொண்டே வருவதால் சீன அரசு எந்த நேரமும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமான ஆக்சிசன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இதற்காக பல சர்வதேச நாடுகள் அதற்கு உதவி செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் சீன அரசு செய்து கொடுக்க தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சீன அரசு தொலைக்காட்சியில் கொரோனாவுக்கு எதிரான இந்த கடுமையான போராட்டத்தில் இந்தியாவிற்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இந்தியாவிற்கு வேண்டிய ஆதரவையும் உதவியையும் அளிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.