ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்ட விளைபொருட்களின் விபரங்களை பார்க்கலாம்
தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் விளைந்த பொருட்களை விற்பனைக்கு சந்தைக்கு அனுப்ப முடியாது சூழலில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூக்களும் பறிக்கப்படாமல் செடியிலேயே காய்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் விவசாய விளைபொருட்கள் அறுவடை செய்தும் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.