கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரா, தடுப்பூசி 100% பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாஸ்க் அணிந்து கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றது. தற்போது உலகம் முழுமைக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது.
மக்களுக்கு பயத்தை போக்கி, கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள நாட்டின் பெரிய பெரிய தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள் என தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா ? போட்டுக் கொள்வதால் பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்ற அச்சம் சற்று தணிந்துள்ளது.
இந்நிலையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தடுப்பூசி போட்டுகொணடடர். ரஷ்யா அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எந்த பாதிப்பும் இல்லை. கொரோனா தடுப்பூசி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தடுப்பூசி 100% பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.