Categories
உலக செய்திகள்

இது புதுசா இருக்கே…. தடுப்பூசி போட்டுக்கொண்டால் போனஸ் கிடைக்குமா….? பல்பொருள் அங்காடியின் புதிய அறிவிப்பு….!!

ஜெர்மனியில் இயங்கிவரும் ஒரு பல்பொருள் அங்காடி தடுப்பூசி போட்டுக் கொண்ட தங்கள் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் பல பல்பொருள் அங்காடிகள் தங்கள் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பரிசு அல்லது பணம் கொடுப்பதாக அறிவித்தது வருகின்றது. அதேபோல் தற்போது ஜெர்மனியும் செய்துள்ளது. இங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக ஒரு பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது.

Edeka Nord என்னும் பல்பொருள் அங்காடி தடுப்பூசி போட்டுக் கொண்ட தனது பணியாளர்களுக்கு 50 யூரோக்கள் போனஸ் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் இப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சட்டப்படி சரியா என்று ஒரு கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Categories

Tech |