Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கண்டிப்பாக கடைக்பிடிக்கனும்…. மாணவர்களின் நற்செயல்….. மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு…!!

சேலம் மாவட்டத்தில் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொரோனா தொற்று விழிப்புணர்வை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டதிலுள்ள சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாணவர்கள் கொரோனா தொற்று விழிப்புணர்வை மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் நடத்தியுள்ளனர்.

இந்த ஊர்வலத்தின் போது இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை கட்டிக்கொண்டு முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் மற்றும் அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதே தொற்றிலிருந்து மக்களை காத்துக் கொள்ள வழி என்று மக்களுக்கு தெரிவித்தபடி சென்றுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு சட்ட கல்லூரி வளாகத்தில் தொடங்கி ஏ.வி.ஆர், ரவுண்டானா, கந்தம்பட்டி, பைபாஸ், பழைய பேருந்து நிலையம் மற்றும் கன்னங்குறிச்சி வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவுபெற்றது.

Categories

Tech |