Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 854 மரணம்….. கொரோனா பிடியில் அமெரிக்கா ….!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 854ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

American Coronavirus Death In Wuhan Confirmed By U.S. Embassy : NPR

 

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,087,374 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,392 பேர் உயிரிழந்துள்ளனர். 227,989 பேர் குணமடைந்த நிலையில் 800,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,402 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Deaths Surpass 200, and State Department Urges Against Travel to ...

கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 854 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 6,924ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் 2,69,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 112,015 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 2,51,057 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 5,787 பேர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

Categories

Tech |