Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது….. உயிரிழப்பு 824ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29.20 லட்சமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 9.60 லட்சம், ஸ்பெயினில் 2.23 லட்சம், இத்தாலியில் 1.95 லட்சம், பிரான்ஸ்சில் – 1.61 லட்சம், ஜெர்மனியில் – 1.56 லட்சம், பிரிட்டனில் – 1.48 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்ட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 26,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 5,804 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 19,868 சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7,628 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 1,076 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 323 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல குஜராத்தில் 3,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 பேர் குணமடைந்துள்ள நிலையில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் புதிதாக 58 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அஜ்மீரில் 11, ஹனுமகர் மற்றும் ஜலவர் நகரில் தலா 1, ஜோத்பூரில் 15, ஜெய்ப்பூரில் 7, கோட்டாவில் 3 மற்றும் நாகூரில் 20 பேரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |