இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பால் 369 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,282 பேர் குணமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் இன்று 66 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜோத்பூரில் 13, 11 அஜ்மீரை சேர்ந்தவர்கள், ஜெய்ப்பூரிலிருந்து 17 மற்றும் கோட்டாவைச் சேர்ந்த 19 பேரும் கொரோனோவால் பாதிக்கபட்டுள்ளனர். ராஜஸ்தானில் மொத்தமாக 2,328 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.