தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தமிழக அரசு, நேற்று 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. மேலும் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ல் இருந்து 26 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 66 வயது முதியவர் பெருந்துறை மருத்துவமனையிலும் , துபாய் நாட்டை சேர்ந்த 63 வயது முதியவருக்கு வாலாஜா அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#UPDATE: 3 new positive cases of #covid19 in TN. 18 Y M contact of 2nd Pt at #RGGH. 63 Y M Dubai return at #Walajah GH. 66 Y M contact of Thai nationals at #IRTT, Perundurai. Pts are in isolation & stable. @MoHFW_INDIA #TNHealth @CMOTamilNadu @Vijayabaskarofl
— National Health Mission – Tamil Nadu (@NHM_TN) March 25, 2020