கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர் இறந்துள்ளார்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது.
இந்நிலையில் மலேசியாவில் இதுவரை கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்ந்துள்ளது” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். கொரானாவால் பாதிக்கப்பட்ட 74 வயதான முதியவர் பலியானார். இன்றுவரை, மலேசியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,306 ஆக உள்ளது.