இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 380 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது.
உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 4ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,10,744 பேரும், தமிழகத்தில் 46,504 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,128 பேரும், தமிழகத்தில் 479 பேரும் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,53,178 ஆக உயர்ந்துள்ளது.