தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 400க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தமிழகத்தில் அதிகமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் குணமடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மட்டும் இரண்டு பேர் புதிதாக மரணமடைந்துள்ளார்.
காலை டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததை உறுதிபடுத்திய தமிழக சுகாதாரத்துறை தற்போது தேனியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவரின் மனைவி தேனி அரசு மருத்துவக்கல்லூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.