Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.1% மட்டுமே உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக ஆறுதல் தகவலை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 14ஆக உயர்ந்துள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 47 வயது சென்னை நபர், தனியார் மருத்துவமனையில் 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.1% மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என்றும் தமிழகத்தில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பில் உள்ளதாகவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தஞ்சை மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த கர்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Categories

Tech |