தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 63 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 2,852-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எணிக்கை 52,926ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 60,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 1,264-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 39,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 56.27 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில்கொரோனா ரத்த பரிசோதனை இதுவரை 11,47,193 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 30,571 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.