Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிகை 42 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும். காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கண்டறிந்து வருகிறோம்.

சுவாச தோற்று, 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை தனிப்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 14 நாட்களில் வெளியில் இருந்து வந்தார்களா என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். தனிப்படுத்தபவர்களுக்கு மன ஆலோசனை வழங்க வழங்க தன்னார்வலர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவர் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |