Categories
அரசியல்

குட் நியூஸ் : எகிறும் கொரோனா….. மடக்கிய மருத்துவர்கள்… அசத்தும் தமிழகம் …!!

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு ஏதும் நிகழாததால் மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கிறது..

இந்தியாவில் கொரோனா வைரஸ் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சிலர் சென்றதன் காரணமாக திடீரென வேகமெடுக்க தொடங்கியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் கடந்த 2 நாட்களாக வழக்கம்போல கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40ஐ கடந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

இதனிடையே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் திறம்பட சிகிச்சையளித்து ஒரே நாளில் 100 மற்றும் 80 க்கும் மேல் நோயாளிகளை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.. இது மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது.. அதேசமயம் பலி எண்ணிக்கையும் தினமும் ஒவ்வொன்றாக உயர்ந்து வந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்று சுகாதாரத்துறை இன்று மாலை தெரிவித்துள்ளது ..

இன்று தமிழக சுகாதாரத்துறை கூறியதாவது, இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரேநாளில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365ல் இருந்து 411 ஆக அதிகரித்துள்ளது.. அதேபோல தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்றும் தெரிவித்தது.

இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றியதன் காரணமாக கடந்த 3 நாட்களாக, அதாவது 16 ஆம் தேதிக்கு பின் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. இந்த செய்தி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது..  இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |