தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1% ஐ தாண்டியுள்ளது. இன்று 797 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 11 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் தற்போது வரை வேறு நோய் பாதிப்பு இல்லாதா 52 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25,344 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,132 பேர் ஆண்கள், 710 பேர் பெண்கள், ஒரு திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 20,679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயதுக்குட்பட்ட 2,362 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 38,696 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 5,446 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.