வடகிழக்கு மாநிலங்களில் கொரோனவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,89,463 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு,ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மேற்கண்ட 4 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனா பாதிப்பால் உயிரிழக்கவில்லை என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.