சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 890 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராயபுரம் – 890 ,
கோடம்பாக்கம் – 835,
திரு.வி.க நகரில் – 662 ,
அண்ணா நகர் – 448,
தேனாம்பேட்டை – 564,
தண்டையார் பேட்டை – 402,
வளசரவாக்கம்- 450,
அம்பத்தூர் – 254,
அடையாறு – 290,
திருவொற்றியூர் – 120,
மாதவரம் – 72,
பெருங்குடி – 64,
சோளிங்கநல்லூர் – 64,
ஆலந்தூர் – 61,
மணலி – 55 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.