Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது.

28 நாட்கள் 15 மாவட்டங்களிலும், 14 நாட்கள் 80 மாவட்டங்களில் இல்லை என்று உள்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் சமூக பரவல் ஏற்படவில்லை, இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த சென்னை, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என உள்துறை இணைச் செயலாளர் கூறியுள்ளார். இந்த மத்திய குழு கொரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |