Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

JUST NOW : கிருஷ்ணகிரியில் கொரோனா அச்சம் – கண்காணிப்பில் 9 பேர் …!!

சீனாவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனா , ரஷ்யா , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். தற்போது உலக நாடுகளில் பலவும் கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக சீனாவில் இருக்கக்கூடிய அனைவரையும் தங்கள் நாட்டுக்கு திருப்ப அளிக்கின்றனர். அந்தவகையில் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இன்று தாயகம் திரும்பினர்.

சீனாவில் தங்கி மருத்துவம் படித்த மாணவர்களாகவும் , அங்கே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அவர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏதும் இல்லை என அறியப்பட்டு சீன அரசு மூலமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அவர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏதும் இல்லை என சோதனை முடிந்த பிறகு அவர்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசும் அவர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சொந்த கிராமங்களுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்ததில் இதுவரை  வைரஸ் , காய்ச்சல் என எந்தவிதமான அறிகுறிகளும் இல்ல.  இருப்பினும் அவர்களை முழு மருத்துவ கட்டுப்பாட்டில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்கள் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்கின்ற ஒரு கட்டுப்பாடு அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க அவர்கள் மருத்துவர்களின் அறிவுரையை இருக்கிறார்கள்.

Categories

Tech |