இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ள நிலையில் 1036 பேர் குணமடைந்து, 339 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 217 பேர் குணமடைந்து, 160 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லியில் 1,510 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட நிலையில் 30 பேர் குணமடைந்து, 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதில் 58 பேர் குணமடைந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர்.