Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்குகிறது….. உயிரிழப்பு 872ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917லிருந்து 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 826 லிருந்து 872ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914லிருந்து 6,185ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 48 இறப்புகள் பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 440 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,068ஆக உயர்ந்துள்ளன.

பீகாரில் இன்று புதிதாக 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 290ஆக உள்ளது. ராஜஸ்தானில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 2221 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காலை 10 மணிக்கு காணொலியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள், மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது ஆகியவை பற்றி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Categories

Tech |