தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தொடங்கி உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு 1000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து இருக்க கூடிய நிலையில் அதற்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு பெருமளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு தாக்கம் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.