சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திருவிக நகர் – 38, கோடம்பாக்கம் – 29, அண்ணா நகர் – 26, தண்டையார்பேட்டை – 30, தேனாம்பேட்டை – 30 பேருக்கும், பெருங்குடி, அடையாற்றில் தலா 7 பேருக்கும், வளசரவாக்கம், ஆலந்தூர், திருவொற்றியூரில் தலா 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாதவரத்தில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.