கொரோனா வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 12,10,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்பில் இருந்து சுமார் 2,50,000-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.