Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் நேற்றைய நிலவரப்படி 2,645 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,176 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் திருவள்ளூரில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,745 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |