திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 3,420 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,331 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,520ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனா பாதித்த 58 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜுன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.