திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த நகராட்சி ஆணையர் சந்தானம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூரில் நேற்று வரை 2,414 பேர் காரோணவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போதுவரை 1,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்றுவரை 1,203 பேர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை கொரோனவால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நகராட்சி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.