ஆவின் நிர்வாக இயக்குனருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் நிர்வாக இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 50 வயதான இவர் சென்னையில் இருக்கக்கூடிய அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய 3 இடங்களுக்கு ஆவின் பால்பாக்கெட் சப்ளை செய்வது சம்பந்தமான அனைத்திற்கும் பொறுப்பான அதிகாரியாக இருந்துள்ளார் என்று தெரிகின்றது. இவர் மாதவரம் பால்பண்ணையில் தான் அதிக நாட்கள் வேலை பார்த்துள்ளார்.
மாதவரம் பால்பண்ணையில் வேலை செய்தவர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது இந்த அதிகாரிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பால்பண்ணையில் கடந்த மே 4ஆம் தேதி முதலாவதாக இரண்டு பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை நான்கு, ஐந்து, ஆறு, என்று உறுதி தற்போது மாதவரம் பால்பண்ணையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.