ராஜஸ்தானில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மாநிலத்தில் தற்போது 1,534 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 1,121 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது வரை, குணமடைந்தவர்களில் 714 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 லிருந்து 37,336 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,147 லிருந்து 1,218- ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,889 லிருந்து 9,951 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 11,506 பேரும், குஜராத்தில் 4,721 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ராஜஸ்தானில் மேலும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 2,720 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.